மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதல்; தொழிலாளி பலி
x
திருப்பூர்


குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி ஊராட்சி அம்மன் கோவில் பதியைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 35) . பனியன் நிறுவன தொழிலாளி. இவர்நேற்று மாலை குன்னத்தூரில் இருந்து வெள்ளியம்பதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருவாய் முதலியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ரவிக்குமார் பலியானார். இந்த விபத்து குறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரணை செய்து வருகிறார்.


Next Story