டிராக்டர் ஏர் கலப்பையில் சிக்கி மாணவன் சாவு
கடத்தூர் அருகே டிராக்டர் ஏர் கலப்பையில் சிக்கி மாணவன் இறந்தான்.
தர்மபுரி
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சஷ்டிநாதன் (வயது 7). சிறுவன் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை தங்களுக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழவு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் மாணவன் டிராக்டரில் ஏறி அமர்ந்து இருந்தான். அப்போது திடீரென மாணவன் டிராக்டர் ஏர் கலப்பையில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story