சாமி ஊர்வலத்தில் லாரி புகுந்து 2 பேர் சாவு


சாமி ஊர்வலத்தில் லாரி புகுந்து 2 பேர் சாவு
x

கடத்தூர் அருகே சாமி ஊர்வலத்தில் லாரி புகுந்து 2 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே சாமி ஊர்வலத்தில் லாரி புகுந்து 2 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூட்டத்தில் லாரி புகுந்தது

கடத்தூர் அருகே உள்ள சில்லார அள்ளி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் சாமி ஊர்வலம் சென்றது இதற்காக சில்லாரஅள்ளியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) என்பவருக்கு சொந்தமான சரக்கு வேனில் அம்மன் சிலையை எடுத்து கொண்டு ஊர் மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேனை செந்தில்குமார் ஓட்டி சென்றார்.

கடத்தூர்-பொம்மிடி சாலையில் தனியார் பள்ளி அருகே சென்ற போது கடத்தூரில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாமி ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் அலறி அடித்து ஓடினர். கூட்டத்தில் புகுந்த லாரி மோதியதில் செந்தில்குமார், சுப்பிரமணி (56), வள்ளியம்மாள் (65), சீனிவாசன் (62), பவன் (13), கோவிந்தம்மாள் (54) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் 6 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி, கோவிந்தம்மாள் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி ஊர்வலத்தில் லாரி புகுந்து 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஆழ்த்தியது.


Related Tags :
Next Story