தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு
x

மாரண்டஅள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை இறந்தது.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை இறந்தது.

தண்ணீர் தொட்டி

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி அருகே நடுகுட்லான‌அள்ளியை சேர்ந்தவர் திம்மப்பன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு விஸ்வன் தாஸ் (வயது2) என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை குழந்தையை வீட்டில் விளையாட விட்டு சங்கீதா குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணவில்லை.

இதனால் குழந்தையை அவர் தேடிய போது வீட்டுக்கு அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை சாவு

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story