கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை சாவு
காவேரிப்பட்டணம் அருகே கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை இறந்தது.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை இறந்தது.
கால்வாயில் விழுந்த குழந்தை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா காலம்பாடி அருகே உள்ள கோடல்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி ஓவியா (வயது 20). இவர்களின் மகள் கனியாஸ்ரீ (2). ஓவியா கடந்த 3 மாதங்களாக திம்மாபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை ஓவியா அணை கால்வாயில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை கனியாஸ்ரீ அருகில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கால்வாயில் தவறி விழுந்தது.
பரிதாப சாவு
இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.