விபத்தில் கட்டிட மேஸ்திரி சாவு


விபத்தில் கட்டிட மேஸ்திரி சாவு
x

நல்லம்பள்ளி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வெத்தலக்காரன்பள்ளம் லாலாக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது28). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். தடங்கம் மேம்பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூஞ்சோலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று பூஞ்சோலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story