கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாய தொழிலாளி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது டி.ராமநாதபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது45).இவர் விவசாய கூலித் தொழில் செய்து வந்தார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது தோட்டது கிணற்றில் ரவீந்திரனுடன் சேர்ந்து 2 பேரும் கிணற்றுப் பகுதியில் இருந்த மரங்களை அகற்றினர்.

அப்போது சுமார் 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் பெருமாள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.ராமநாதபுரம் போலீசார் மற்றும் டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி சுமார் 7 மணி நேர போராட் டத்திற்கு பின் பெருமாள் உடலை மீட்டனர்.

விசாரணை

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டி.ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story