தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x

கம்பைநல்லூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 54). மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று கடத்தூர் அருகே உள்ள சுங்கரஅள்ளியில் ஒரு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story