மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி இறந்தார்.
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள தீத்தாரப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பாலக்கோட்டில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டு மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பெரியசாமியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் பெரியசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றெோரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story