மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் முனிபோயன்தொட்டி கிராமத்தை சேர்ந்த வேலன் (45) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தின்னூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் திம்மராயப்பா படுகாயம் அடைந்தார். வேலன் லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திம்மராயப்பா மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.