வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை சாவு


வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை சாவு
x

மாரண்டஅள்ளியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை செத்தது.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்கள் தங்களது 2 வயது குழந்தை நிதினை பாட்டி ராஜம்மாளிடம் விட்டு, விட்டு நேற்று வேலைக்கு சென்றனர். மாலை பாட்டியும், பேரனும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை இவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ராஜம்மாள் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் வந்து ராஜம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story