மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் வாலிபர் பலி
x

தாராபுரம் அருகே விவசாய மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருப்பூர்


தாராபுரம் அருகே விவசாய மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது58) விவசாயி. இவருக்கு பாலசுப்பிரமணியம் (24) என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ்நிலையில் சோளக்காட்டுக்கு நேற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க பாலசுப்பிரமணியம் சென்றார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது மின்சாரம் பாலசுப்பிரமணியத்தின் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அப்போது பக்கத்து தோட்டத்தில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமி, பாலசுப்பிரமணியத்துக்கு போன் செய்தார். அப்போது ரிங் போனது. ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணசாமியும், அவரது மகள் கலைச்செல்வியும் சோளக்காட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அலங்கியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அலங்கியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story