பாகலூர் அருகே தீயில் கருகிய பெண் பலி
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி கீதா (வயது 32). இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சுடுதண்ணீர் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீதாவின் உடலில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால் கீதா வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கீதா மீது பற்றிய தீயை அணைத்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story