அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ளது வெங்கடராயபுரம். இந்த பகுதியில் செங்கல் சூளை ஒன்றின் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மது போதையில் வந்தார். போதை அதிகமானதால் அவர் அந்த பகுதியில் படுத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story