மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு


மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை அருகே உள்ள கண்டரப்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஷ்பாபு (வயது 38). தொழிலாளி. இவர் கடந்த 11-ந் தேதி மாலை மோட்டார்சைக்கிளில் பேரிகை மாருதி நகர் பக்கமாக கிருஷ்ணகிரி-பேரிகை சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளுடன் ஜெகதீஷ்பாபு நிலைதடுமாறி கீழே தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெகதீஷ்பாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story