சரக்குவாகனம்,மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி


சரக்குவாகனம்,மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
x

சரக்குவாகனம்,மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியாகினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முத்தையா (வயது 65), இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (40) ஆகிய 2 பேரும் பாம்பனில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். ராமேசுவரத் திற்கும் தங்கச்சிமடத்திற்கும் இடையே தண்ணீர் ஊற்று என்ற இடத்தின் அருகே வந்துபோது ராமேசுவரத்தில் இருந்து சரக்குவாகனம் ஒன்று பாம்பனை நோக்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதின. இதில் படுகாயம் அடைந்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி பலியானார். படுகாயம் அடைந்த முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தங்கச்சிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த முகமது கையூப் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story