விஷ காய்களை தின்ற பெண் சாவு
தேன்கனிக்கோட்டை அருகே விஷ காய்களை தின்ற பெண் இறந்தார்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கனிவிகன். இவருடைய மனைவி மாதேவி (வயது 27). சம்பவத்தன்று இவர் காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story