தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.
ஓசூர்:
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.
தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகேயுள்ள மோட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 51). தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே பெலத்தூர் பகுதியில் மனைவியுடன் தங்கி, கூலி ேவலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், மோட்டார் சைக்கிளில் ஓசூர்- பாகலூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். காளேஸ்வரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில், சேகர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மோதியது
ஓசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. ஜங்ஷன் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் அந்த நபர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, மூக்கண்டபள்ளி கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா, ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.