தொழிலாளி சாவு


தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திருமல்வாடி அருகே உள்ள சீங்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் ஓசூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் ஓசூரில் அமீரியா ஜங்ஷன் அருகில் ஒரு கட்டிடத்தில் 4-வது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டிடம் கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story