வாகனம் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு


வாகனம் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே வாகனம் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள தேசுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 25). ஊத்தங்கரையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலை முடித்து கந்திகுப்பம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி எதிரில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் நரசிம்மன் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று நரசிம்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story