மாயமான முதியவர் பிணமாக மீட்பு


மாயமான முதியவர் பிணமாக மீட்பு
x

மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.

ராமநாதபுரம்


பரமக்குடி அருகே உள்ள பனையூர் வண்டல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் காளிமுத்தன் (வயது80). இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றாராம். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் நயினார்கோவில் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே லாந்தை - கருங்குளம் கண்மாய் அருகில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததை அறிந்து ராமநாதபுரம் நகர் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைத்திருந்தனர். அவரின் உடல் அடையாளங்களை வைத்து காளிமுத்தன் என்று சந்தேகத்தின்பேரில் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரின் மகன் புவனேஸ்வரன் (52) என்பவர் விரைந்து உடலை பார்த்து தனது தந்தைதான் என்பதை உறுதி செய்தார். இதன்படி அவரின் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story