அடுக்குமாடியில் இருந்து விழுந்த கண்ணாடி கழுத்தை அறுத்ததால் தொழிலாளி பலி


அடுக்குமாடியில் இருந்து விழுந்த கண்ணாடி கழுத்தை அறுத்ததால் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் ைசக்கிளில் சென்றபோது அடுக்குமாடி குடியிருப்பில் உடைந்து விழுந்த ஜன்னல் கண்ணாடி, சிலிண்டர் வினியோகம் செய்ய வந்த தொழிலாளியின் மீது விழுந்து, கழுத்தை அறுத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

மோட்டார் ைசக்கிளில் சென்றபோது அடுக்குமாடி குடியிருப்பில் உடைந்து விழுந்த ஜன்னல் கண்ணாடி, சிலிண்டர் வினியோகம் செய்ய வந்த தொழிலாளியின் மீது விழுந்து, கழுத்தை அறுத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

கண்ணாடி உடைந்து விழுந்தது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 42). இவர் காரைக்குடியில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.

பேயன்பட்டியில் உள்ள ஒரு குடோனில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு வினியோகம் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

காரைக்குடி பர்மா காலனியில் ஒரு வீட்டிற்கு கியாஸ் சிலிண்டரை பழனியப்பன் கொண்டு சென்றுள்ளார். தந்தை பெரியார் நகர் 9-வது வீதி அருகே சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து ஜன்னல் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.

பரிதாப சாவு

அந்த கண்ணாடி கீழே சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பழனியப்பன் மீது எதிர்பாராதவிதமாக விழுந்தது. கண்ணாடி துண்டுகள் அவர் கழுத்தை வெட்டின. ரத்த வெள்ளத்தில் கீேழ விழுந்து பழனியப்பன் உயிருக்கு போராடினார்.

இந்த விபரீத சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் நாராயணன், மேலாளர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story