ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூரில் ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மூதாட்டி

பர்கூர் பூமலை நகர் இருளர் காலனியை சேர்ந்தவர் மின்னல். இவரது மனைவி பத்மா (வயது 60). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள வளையக்காரப்பள்ளி ஏரி பக்கமாக சென்றார். அப்போது அவர் திடீரென ஏரியில் தவறி விழுந்தார்.

இதைகண்டு அதி்ாச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story