கார்கள் மோதல்: கட்டிட தொழிலாளி சாவு
காவேரிப்பட்டணம் அருகே கார்கள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி இறந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே கார்கள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி இறந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்கள் மோதல்
திருப்பத்தூர் மாவட்டம், கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரும், இவரது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21), கார்த்தி(21) ஆகியோர் தர்மபுரியில் உள்ள ஒரு கோவிலுக்கு நேற்று காரில் சென்றனர்.
அப்போது எர்ரஅள்ளி அருகே கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மற்றொரு கார் வந்து கொண்டு இருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலைதடுப்பை தாண்டி, எதிர்திசையில் ஜெகன் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில், ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
2 பேர் படுகாயம்
மேலும் ராஜ்குமார், கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ததனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.