மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே பன்றியை வேட்டையாட கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்த போது மின்சாரம் தாக்கிவாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே பன்றியை வேட்டையாட கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்த போது மின்சாரம் தாக்கிவாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

ஊத்தங்கரை அருகே உள்ள சாலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு பன்றி வேட்டைக்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது கொல்லப்பட்டியை சேர்ந்த விவசாயி எத்திராஜ் என்பவரது மாந்தோப்பில் ரஞ்சித் மின்சாரம் தாக்கி மின் கம்பியை கையில் பிடித்தவாறு இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பன்றி வேட்டைக்கு...

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பன்றியை வேட்டையாட சென்ற ரஞ்சித் மாந்தோப்பில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வயரை மின் கம்பியில் இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story