மோட்டார்சைக்கிளில் கணவருடன் வீட்டுக்கு சென்ற பெண் தவறி விழுந்து சாவு


மோட்டார்சைக்கிளில் கணவருடன் வீட்டுக்கு சென்ற பெண் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

பெண் சாவு

ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தெய்வானை (வயது 50). நேற்று முன்தினம் தெய்வானைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது மழையின் காரணமாக தெய்வானை பின்னால் அமர்ந்து குடை பிடித்தவாறு சென்றுள்ளார். ஊணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பலத்த காற்றில் குடை பின்னுக்கு இழுத்தது. இதனால் நிலை தடுமாறி தெய்வானை கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்து தெய்வானையின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story