காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
பல்லடம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதலர்கள்
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் காசிநாத். இவருடைய மனைவி லீலா. இந்த தம்பதியின் மகள் பூஜா (வயது 19). காசிநாத்-லீலா தம்பதி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அனாதையாக தவித்த பூஜாவை பல்லடம் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அவருடைய தாய்மாமா இப்ராகிம் வளர்த்து வந்தார்.
பூஜா ராயர்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் லோகேஷ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது.
தீ வைப்பு
பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகேசை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் பல்லடம் பனப்பாளையம்-பெத்தாம்பாளையம் சாலையில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் பூஜா வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், பூஜாவிடம் நைசாக பேசி சற்று தொலைவில் இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து அதை பூஜா மீது ஊற்றி திடீரென்று தீ வைத்துள்ளார்.
இதில் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறி துடித்தபடிபிரதான சாலைக்கு ஓடிவந்து விழுந்தார். இதற்கிடையில் பூஜா மீது தீ வைத்த காதலனும் தப்பித்து செல்லும்போது மோட்டார்சைக்கிளுடன் சிறிது தூரத்தில் கீேழ விழுந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பூஜாவுக்கு பல்லடம் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அது போல் லோகேஷ் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்த பூஜா போலீசாரிடம் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தனது காதலன் லோகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.