மின்சாரம் தாக்கி பெண் சாவு
பர்கூர் அருகே கம்பி அறுந்து விழுந்ததில் துணி காய வைத்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.
பர்கூர்
பர்கூர் அருகே கம்பி அறுந்து விழுந்ததில் துணி காய வைத்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.
மின்சாரம் தாக்கி பெண் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ள செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி அம்சா (வயது 39). இவர் நேற்று முன்தினம் வீட்டு முன்பு உள்ள கம்பி வேலி மீது துணிகளை துவைத்து காய போட்டுக் கொண்டு இருந்தார். மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து வேலி மீது விழுந்தது.
அப்போது துணி காய வைத்து கொண்டு இருந்த அம்சாவை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சோகம்
அவர்கள் இறந்த அம்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட இதே பகுதியில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்தார். பாலிநாயனப்பள்ளி ஊராட்சியில் அடிக்கடி மின்சார வயர்கள், மின் கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.