கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
சூளகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி
சூளகிரி
சூளகிரி அருகே உள்ள குரும்ப சப்படியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 72). விவசாயி. சம்பவத்தன்று இவர் தோட்டத்திற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது முனியப்பா கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் சுப்பிரமணி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் முனியப்பா கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story