மயங்கி கிடந்த முதியவர் சாவு
வேப்பனப்பள்ளி பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து முதியவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story