இரும்பு தடுப்பின் மீது கார் மோதிசப்-இன்ஸ்பெக்டரின் மகன் பலி


இரும்பு தடுப்பின் மீது கார் மோதிசப்-இன்ஸ்பெக்டரின் மகன் பலி
x
திருப்பூர்


அவினாசி அருகே இரும்பு தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உயிரிழந்தார். உடன் சென்ற 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

கல்லூரி மாணவர்

கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நவீன் (வயது19). இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

இவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் மகன் ஹரீஸ் (19) மற்றும் தரணீஸ் (19) ஆகியோருடன் சேர்ந்து ஒரு காரில் கோவையிலிருந்து சினிமா பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். காரை நவீன் ஓட்டிச்சென்றார்.

மாணவர் சாவு

கோவை- சேலம் பை பாஸ் ரோட்டில் அவினாசியை அடுத்து வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதியது. இதில் கார் சாலையில் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் நவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் நவீனை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காயம் அடைந்த நவீனின் 2 நண்பர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

---


Next Story