சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு


சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:17 PM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே மது போதையில் லாரிக்கு அடியில் தூங்கியபோது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே மது போதையில் லாரிக்கு அடியில் தூங்கியபோது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் சூர்யா (வயது 20). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அகரம் முருகன் கோவில் அருகே நிறுத்தி இருந்த லாரிக்கு அடியில் மதுபோதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

இதை கவனிக்காத அதே ஊரை டிரைவர் கார்த்திக் (25) லாரியை எடுத்துள்ளார். அப்போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story