மாடு முட்டியதில் மூதாட்டி சாவு
வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த மாடு முட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த மாடு முட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மாடு முட்டியது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ராஜி (வயது72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் இவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மூதாட்டி சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த மாடு முட்டி மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.