கார் மரத்தில் மோதி வாலிபர் சாவு
அஞ்செட்டி அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
அஞ்செட்டி அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் கார் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அண்ணா சாலை பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் சாகித் (24). அஞ்செட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவேல் (24). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஓசூரில் வாரிசு படம் பார்க்க சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.
இந்த காரை சாகித் ஓட்டி சென்றார். தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி வனத்துறை விருந்தினர் மாளிகை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் பஷீர், மணிவேல், சாகித் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வாலிபர் சாவு
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.