தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எம்.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). தொழிலாளி. இவர் உத்தனப்பள்ளி அருகே ஆழியாளம் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story