சரக்கு ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி வாலிபர் சாவு
காவேரிப்பட்டணம் அருகே சரக்கு ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி வாலிபர் இறந்தார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மோகன்சுந்தர் (வயது 25). சம்பவத்தன்று இவர் ஸ்கூட்டரில் அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன்சுந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முனதினம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story