விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சாவு
பாகலூர் அருகே விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்
பாகலூர் அருகே விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பரிதாபமாக இறந்தார்.
ரியல் எஸ்டேட் அதிபர்
ஓசூர் ஆவலப்பள்ளி சாலை பஸ்தி திருமலை நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். இவரும், வெங்கடேஷ்புரத்தை சேர்ந்த கல்யாண் செட்டி (62) என்பவரும் மோட்டார்சைக்கிளில் பேரிகை-பாகலூர் சாலையில் கர்னப்பள்ளி பாலம் பக்கமாக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முனிராஜ், கல்யாண்செட்டி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முனிராஜ் பரிதாபமாக இறந்தார். கல்யாண் செட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.