வாகனம் மோதி மூதாட்டி சாவு


வாகனம் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:22+05:30)

சூளகிரி அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் வெங்கடம்மா (வயது 67). சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story