கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 2:46 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள பூமாலை நகரை சேர்ந்தவர் கந்தன் (வயது 35). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சாலையில் நடந்து சென்றபோது கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story