ஓசூரில் பெயிண்டர் மர்ம சாவு


ஓசூரில் பெயிண்டர் மர்ம சாவு
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

ஓசூரில் பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜீவன் (வயது 33). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் கெலவரப்பள்ளியில் நிலம் ஒன்றில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவன் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story