குழியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பாகலூர் அரகே செல்போன் கோபுரம் அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி பாகலூர் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சுரேஷ் எதிர்பாராதவிதமாக குழிக்குள் தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story