வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பெண்கள் இறந்தனர்.
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பெண்கள் இறந்தனர்.
கார் மோதியது
பெங்களூரு சிக்கபேளூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரது மகன் சிவலிங்கம் (வயது29). பெங்களூருவில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாயார் வள்ளியம்மாள் (46), மாமா மகள் வித்யா (15) ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் திருவிழாவிற்கு ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் குந்தாரப்பள்ளி மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாள் சம்பவ இடத்தில் இறந்தார். தகவல் அறிந்து குருபரப்பள்ளி போலீசார் அங்கு சென்று பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிவலிங்கம், சிறுமி வித்யா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி ராமி (38). இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். சூளகிரிக்கு வந்திருந்த ராமி, சின்னாறு அருகில் நடந்து சென்றார். அப் போது அந்த வழியாக வந்த லாரி அவர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.