மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

மத்தூரில் மோட்டார்சைக்கிள்கள் மோதி கொண்டா விபத்தில் வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள மாணிக்கமேடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது24). சுவீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் மத்தூர்பதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், அஜித் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story