வாகனம் மோதி மூதாட்டி சாவு


வாகனம் மோதி மூதாட்டி சாவு
x

சூரமங்கலம் அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.

சேலம்

சேலம் மல்லமூப்பம்பட்டி மாங்குப்பை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி குண்டு பாப்பா (வயது 80). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன்பிறகு திரும்பி வரவில்லை. இந்நிலையில், சூரமங்கலம் பழையூரில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்துபோன மூதாட்டியின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்த கிடந்தது குண்டு பாப்பா என்று அடையாளம் தெரிந்தது. அவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story