ஆட்டோ மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.


ஆட்டோ மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
x

திருப்பூரில் சரக்கு ஆட்டோ மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை டிரைவர் இயக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

திருப்பூர்

திருப்பூரில் சரக்கு ஆட்டோ மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை டிரைவர் இயக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழந்தை

திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா (வயது 26). இவரது மனைவி சரண்யா (22). இவர்கள் இருவரும் கல் உடைக்கும் தொழிலாளிகள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் சர்மிளா என்ற குழந்தையும் உண்டு.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது சரண்யாவின் உறவினரான பகவதி ராஜ் (24) என்பவர் சரக்கு ஆட்ேடாவில் அங்கு வந்தார். பின்னர் சரக்கு ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பகவதிராஜின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் செல்ேபானில் வாடகை சவாரி தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் குழந்தை சர்மிளா சரக்கு ஆட்டோவின் முன்பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தாள். குழந்தையை கவனிக்காத பகவதிராஜ் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து இயக்கினார். அப்போது குழந்தை சர்மிளா மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் குழந்தை சர்மிளா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வௌ்ளத்தில் கீழே சாய்ந்தாள்.

சாவு

இதனை பார்த்து அலறி துடித்த பெற்றோரும், உறவினர்களும் சர்மிளாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சர்மிளா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பகவதி ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரக்கு ஆட்டோ மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story