தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்தவர் துரைபாபு. இவருடைய மனைவி மஞ்சு (வயது 45). இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதற்கிடையே மஞ்சுவை காணாததால் வீட்டில் இருந்தவர்கள் தேடினர். அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துரைபாபு அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story