மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மெக்கானிக் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரிய தெருவை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் சூர்யா (வயது 22). இருசக்கர வாகன மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையில் சென்னப்ப நாயக்கனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சூர்யா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story