அரூர் அருகே பறையப்பட்டி யில்மின்சாரம் தாக்கி ஒலிப்பெருக்கி உரிமையாளர் சாவு
தர்மபுரி
அரூர்
அரூர் அருகே உள்ள பறையப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 36). மைக் ஒலிப்பெருக்கி உரிமையாளர். இவர் நேற்று கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு மைக் செட் கட்டி கொண்டு இருந்தார். அப்போது மின்வயர் அருகில் இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் மாதேஷ் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story