தளி அருகே மொபட் மீது வேன் மோதி பள்ளி மாணவன் சாவு
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாவரபத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டா. இவரது மகன் பவன் (வயது14). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பவனும், அவரது உறவினர் பரமேஷ் (25) என்பவரும் மொட்டில் கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் மாணவன் பவன் வேனின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பரமேஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிநத்தும் தளி போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story