கொண்டலாம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு
சேலம்
கொண்டலாம்பட்டி
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவர் கொண்டலாம்பட்டி அருகே பெரிய களத்தில் ஒரு கட்டிடத்தில் அதன் மொட்டை மாடியில் பெயிண்டு அடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததால் செல்போனில் பேசிக்கொண்டே பெயிண்டு அடித்து கொண்டிருந்தார். அந்த நேரம் மேலே சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக சங்கரின் கை உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சங்கர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story